Posts

Showing posts from July, 2007

விசைப்பலகை, ஆசைப்பலகை, இசைப்பலகை

என் பழைய பதிவுகளை படித்துவிட்டு எப்படி 'டைப்' செய்தீர்கள் என்று பல கேள்விகள் வந்தது. தமிழ் செயலிகளை பற்றி பல்வேறு இணைய தளங்களில் குறிப்புகள் அளிக்கப்பட்டிருக்கின்றன. இருந்தாலும் நல்ல ஒரு செயலி இலவச உபயோகத்திற்கு எட்டுவது கடினமாக இருக்கிறது.. நான் உபயோகப்படுத்துவது கீழே இருக்கும் இவை இரண்டு மட்டும். 'கே ஸ்டார் ஸாப்ட்' இடமிருக்கும் 'குறள்' - நான் பார்த்தவைகளிலேயே மிகச் சிறந்தது. இது இப்போதெல்லாம் இலவசம் இல்லை. விலை $35. இதை வைத்து கொண்டு எந்த 'சாஃப்ட்வேரிலும்' தமிழ் எழுத்தகளை உள்ளிட முடிகிறது. 'ஃபொனெடிக் கீபோர்ட்' என்பதால் ஆங்கில எழுத்தளை கொண்டு 'டைப்' செய்ய முடிகிறது. அடுத்தது 'திருவின்' என்ற ஒரு செயலி. முதலில் அந்த செயலியினுள் 'டைப்' செய்து விட்டு பிறகு 'வெட்டி ஒட்ட' வேண்டியுள்ளது. இது முற்றிலும் இலவசம். முடிந்தால் $50 அனுப்ப கோருகிறார் அதை இயற்றியவர். அதை உபயோகப்படுத்தி தான் இந்த பதிவை எழுதுகிறேன். தவிற எதாவது உங்களுக்கு தெரிந்தால் எனக்கு எனக்கும் தெரியப்படுத்தவும்.

வழி மறைத்திருக்குதே

சென்ற வாரம் சனிக்கிழமை கோயில் சென்றிருந்தோம் - ஸ்ரீ லக்ஷ்மியை தரிசிக்க. - இங்கிருந்து ஒரு மணி நேரம். இந்தியாவில் கோயிலுக்கு செல்லலாம் என்றால் "கோயில் சென்றால் தான் பக்தியா?" என்பான் என் நண்பன். "இறைவன் தூணிலும் இருக்கிறான் துரும்பிலும் இருக்கிறான்" - என்பான். அதை நான் மறந்திருக்க வாய்ப்பில்லை. பிள்ளைக்கு பிரகலாத் என்றல்லவா நாங்கள் பெயரிடடிருக்கிறோம்?. கல்லூரியில் படிக்கும் போது, வளாகத்திற்குள் இருந்த பிர்லா சரஸ்வதி கோயிலுக்கு போவதுண்டு - சரஸ்வதி தேவி ஒரு பக்கம் இருப்பினும் - கோயிலின் கட்டுமானத்தையும் அழகையும் பார்த்து ரசிக்க மட்டுமே நேரம் போதாது. நான் சாதாரண கல்லூரி மாணவனில்லை போலும் - எனக்கு தெரிந்த மட்டும் லக்ஷ்மி தேவியியை தரிசிப்பதை விட கோயிலுக்கு வரும் மற்ற வேறு பல தேவியரை தரிசிக்க வந்த கூட்டம் அதிகம். இருந்தாலும் கொஞ்சம் புண்ணியம் அவர்களை சென்றடைந்திருக்கும் என்பதில் எனக்கு சந்தேகமில்லை. தன்னை அறியாமல் நேரத்தை போக்க வில்வ இலைகளை கிள்ளி எறிந்து ஈசனின் அருளை பெற்ற நாயனாரின் சரித்திரம் ஒரு சான்று. (http://www.dlshq.org/download/nayanar...