Posts

Showing posts from July, 2019

கண்ணனால் பாட்டு பிறந்தது

பாரதி போன்றவர்கள்  இந்த உலகில் வந்து சென்றபின் என்போன்றோரும் கவிதை என்ற பேரில்  கண்றாவிகளை இணையதளங்களில் இட்டு உங்களை வேதனைபடுத்திட இன்றும் உலவுகின்றனர்.  :-).  போனால் போகிறதென்று நீங்களும் கிளிக் செய்து துர்வசத்தினால் வந்தடைந்து விட்டீர்.  படித்து விட்டு போவதில் இன்னும் பாவம் சேரப்போவதில்லை. காலை அலுவலகப்பயணம். சாலைகளில் நெரிசல். ஒன்றும் புதிதல்ல. கன்னடத்தில் ஆல்-இந்திய-வானொலியில் கிராமியப்பாடல். வேறு என்ன செய்வதென்று தவித்த வேளையில், தோன்றிய வார்த்தைகள்.  பல காலமாக கேட்டனுபவிட்ட பஜனைகளின் உள்தாக்கம் ! முதலில் முதல் வரி கண்ணா வா கண்ணா வா, கண்ணே ஓடி வா !! கண்டிப்பாக இரண்டாம் வரி  எதுகையுடன் இருக்க வேண்டாமா?  அப்போ, கண்டிப்பாக  எண் , பெண்  போன்ற வார்த்தைகள் தான் அமைக்க வேண்டும். ஹ்ம்ம் ... இரண்டாம் வரி இப்படி கண்மணியே  கண்ணா கண்ணா ஓடி வா !! ஹ்ம்ம் தாளத்தில்  உட்காரவில்லை இன்னும் இரண்டு மூன்று பதங்கள் தேவை.! கண்ணின் மணியே கண்ணே நீ கண்ணா ஓடிவா  அட. பரவாயில்லையே! வாகனம் நாடு ரோட்டில், ஜன்னல்கள் அடைக்கப் பட்டி...