Posts

Showing posts from 2009

என் இனிய இயந்திரா - பாகம் ஒன்று - மோடோரோலா இட்ராய்ட்

Image
பெருமதிப்பிற்குரிய திருவாளர் சுஜாதா அவர்கள் இன்றிருந்தால் - பெருமிதப்படுவாரா இல்லை வழக்கு போட்டு என்னை நீதிமன்றத்திற்கு அழைப்பாரா என்று தெரியவில்லை... ஆனால் இன்றைக்கு கூகிள் மற்றும் வெரைசான் - அறிமுகப்படித்தயிருக்கும். மோடோரோலா இட்ராய்ட் (Motorola DROID) போனை நான் இப்படித்தான் அறிமுகப்படுத்த வேண்டும். --- போனவாரம் ஒரு நண்பருக்கு ஒரு உதவி செய்கிறேன் என்று சொல்லியிருந்தேன். உதவியின் வேளை வந்தது - எனக்கு வேறு சில பணிகளை முடிக்க நேரம் போத வில்லை - அவர் என்னை பல முறை போனில் அழைத்தும் - போன் - சத்தம் செய்யவில்லை - அனைத்து அழைப்புகளும் கிணற்றில் விழுந்து - அவர் கொஞ்சம் தவித்து போய் - எப்படியோ வீட்டு எண்ணை கண்டுபிடுத்து - கடைசியில் பேசினோம் . எல்லாம் சுபமாக முடிந்தது. ஆனால் நான் விஷயத்தை அங்கே விடவில்லை - ச்சே... மொபைல் போனே வேண்டாம் ... பாழாப்போன போன் .. ரொம்ப கஷ்டம்ப்பா .. இதை குப்பையில் போட வேண்டும் என்று சத்தமாக அலுத்துகொண்டேன்.. என் மனைவி காதில் விழும்படியாக மீண்டும் ஓரிரு முறை சத்தமாக ஆர்பாட்டம் செய்தேன் - அதை தவிர, வெகு நாட்களாகவே - - ரொம்ப லாவகமாக அப்பப்போது போனை என் இளை...

கச்சேரி ட்யூடி - பாகம் ரெண்டு

Image
பாகம் ஒண்னு எங்கே என்று கேட்பவர் இங்கே செல்லவும் ---- வெள்ளி மாலை ஒரு நாலரை மணி இருக்கும் - " டோடைன் .. டோடைன் " என்றது என் கணிணி . 12-ஆவது மாடி சன்னலிலிருந்து வேடிக்கை பார்ப்பதை நிறுத்தினேன் - அய்யா சாமி - இது ஒரு "அவுட் லுக் " மீட்டிங் நோட்டீஸ் போலிருக்கே - வெள்ளி மாலை எந்த ஒரு சந்திப்புக்கும் சம்மதிக்கவில்லையே - அடடா என்று பயந்து கொண்டே என்னுடைய "லினுக்ஸ்"-ஐ விட்டுவிட்டு - மைக்ரோசாப்ட் விண்டோஸ் திரை காப்பானை செயலிழக்க செய்தேன் - அட இதானா ... !! ---- தமிழில் வலைப்பதிவு செய்ய ஆரம்பித்ததிலிருந்து என் மூளைக்கு கொஞ்சம் அதிகமான வேலை கிடைத்திருக்கிறது. அன்றாடம் பேசும் பொது பற்பல ஆங்கில சொற்களை தடையில்லாமல் பயன் படுத்தி விட்டு - இங்கு அமர்ந்து இதை எழுதும் பொது - தமிழ் சொற்கள் மற்றும் தமிழ் கலைச்சொற்கள் என்ன உபயோகப்படுத்துவது என்று பிடிப்பது பெரிய காரியமாக உள்ளது. ("என்னங்க சிரிக்கீங்க? பத்து வருஷம் ஆச்சுங்க!") ஆகையினாலே - இந்த எழுத்தில் பல பிழைகள் இருக்கும் - மன்னித்தருள வேண்டும் என்று கேட்கலாம் - செய்யப்போவதில்லை - பதிலாக - உங்களுக்க...

குருவி உட்கார பனம்பழமா ?

காணமால் போனவர் பற்றிய செய்தி :- என்னடா இந்தப்பயல் மொத்தமாக ரெண்டு போஸ்ட் செய்துவிட்டு காணாமல் போய்விட்டான் என்று நினைத்திருப்பீர். 2007-இல் ரெண்டு , பிறகு இன்று ... சரி சரி என்னுடைய முதல் பதிவை பார்த்தவர்களுக்கு ஒரு சின்ன வேண்டுகோள். சும்மா 'எகோநோமிக் சிட்டிவேஷன்' சரியில்லாததால் - பயலுக்கு மன்னிப்பு குடுக்க வேண்டும் என்று ஒரு எண்ணம் தோன்றும் போது - அதை கேட்டு நடப்பது நல்லது :-) சரி மீண்டும் வந்து விட்டேனே இனி என்ன கேள்வி, சந்தேகம் - சும்மா படித்து மகிழுங்கள். ஒரு விஷயம் - என்னமோ தெரியவில்லை இந்த boston கச்சேரி சீசனில் தான் ஆரம்பித்தேன் - சிறிய (ஆமாம் சிறிய!!) இடைவேளைக்கு பிறகு மீண்டும் அதே கச்சேரி சீசனில் எழுதிகிறேன் ... குருவி உட்கார பனம்பழமா இல்லை மெய்யாலுமே எதானு மேட்டர் ஒண்ணு இருக்குதான்னு தெரிலீங்க .. அன்புடன் சீனன்

கச்சேரி ட்யூடி

Image
சந்தானகோபாலன் கச்சேரி, Neiveli Santhanagopalan இந்த வருடம் MITHAS (MIT, Cambridge, MA) நல்ல சில வித்வான்களை அழைத்திருக்கிறது. ஏப்ரல் 19. நெய்வேலி சந்தானகோபாலன் கச்சேரி அற்புதம் - ஆனால் சில குறைகள். இந்த கச்சேரிக்கு என் மனைவிக்கும் எனக்கும் முன்னமே ஒரு சின்ன ஒப்பந்தம் - சின்ன பயல் எழுந்தால், அவள் பார்த்துக்கொள்வது என்று, அவனும் கூட சேர்ந்து பாட ஆரம்பித்தால் வெளியில் கூட்டிசெல்வதும் அவள் பொறுப்பு :-). எப்படியோ பேசி அவளும் சம்மதித்து விட்டாள். அடுத்த கச்சேரியில் இது என் ட்யூடி என்று முடிவாகியது. என் துரதிர்ஷ்டமோ அவள் அதிர்ஷ்டமோ தெரியவில்லை. என் சின்ன பயல் சமத்தாக கார் சீட்டில் முழுக்க முழுக்க தூங்கிவிட்டான் . அடாடா என்று நினைத்திருந்தேன். பெரியவனோ நண்பர் கொண்டு வந்திருந்த DVD பிளேயர் மற்றும் ஹெட்செட்டுக்குள் ஆழ்ந்திருந்தான். ராமாயணம் அவர்களை ஓரிடத்தில் வைத்திருந்தது. அவள் எழஅவேண்டிய நிர்பந்தம் ஏற்படவேயில்லை. மனைவி அவளது நண்பியுடன் ராகங்களை கேட்டு கண்டுபிடிக்கும் ஆர்வத்துடன் இசையை ஆழ்ந்து கவனித்து கொண்டிருந்தாள். எனக்கும் ராகங்களுக்கும் சற்று தொலைவு!!. என் நண்பர் ராகத்தை கண்...