களம் இறங்குகிறேன்
களம் இறங்குகிறேன். -- சனிக்கிழமை காலை ஐந்து மணி - பார்த்தே பல வருடங்கள் ஆகிவிட்டது. உண்மை. இருந்தாலும் இது முதல் முறை அல்ல - முந்தைய வாரம் நடந்ததை நினைத்து பார்க்கிறேன். -- கிளம்ப 40 நிமிடங்கள் - கால் கழுவி, வாய் கழுவி, - ப்ரேக்-பாஸ்ட் அருந்தி - வேண்டாம் - டன்கின் டோனட்ஸ் எதற்கிருக்கிறான் - வழியில் ட்ரைவ் த்ரூவில் வாங்கிக்கொள்ளலாம் - 30 நிமிடங்கள், குளித்து, கும்பிட்டு, உடை மாற்றி - தேவையில்லை வந்து செய்துகொள்ளலாம் - so 10 நிமிடங்கள் - கூகிள் மேப்சை க்ளிக் செய்தேன் - 50 நிமிடங்கள் என்றது - மொத்தம் ஒரு மணி நேரமாவது ஆகும். முன்ன பின்ன ஆனாலும் - மற்றவர்களுக்கு முன்னால் சென்றடைந்து விடலாம். ஐந்து மணி சரிதான்... வீராப்பாக என் ஆபீசில் நண்பருடன் சேர்ந்து உடன் வேலை பார்க்கும் சில இளசுகளிடம் ( ஹ்ம்ம் -வெள்ளை முடி ஒன்று இரண்டு தெரிகிறது - இருந்தாலும் - முயற்சி செய்தால் நானும் இளசு என்று ஏமாற்றலாம் ஒரு நப்பாசை - இதற்கெல்லாம் காரணம் அதுவே - ஆனால் இன்னொரு 3, 4 வருடங்கள்தான் - ஆட்டத்தை மூட்டை கட்ட வேண்டியது தான் போலிருக்கிறது) -- " பசங்களா, சரியா கார்தால 6.30 மணிக்கு வந்துடனும். நான் கிட...