களம் இறங்குகிறேன்
களம் இறங்குகிறேன்.
--
சனிக்கிழமை காலை ஐந்து மணி - பார்த்தே பல வருடங்கள் ஆகிவிட்டது. உண்மை. இருந்தாலும் இது முதல் முறை அல்ல - முந்தைய வாரம் நடந்ததை நினைத்து பார்க்கிறேன்.
--
கிளம்ப 40 நிமிடங்கள் - கால் கழுவி, வாய் கழுவி, - ப்ரேக்-பாஸ்ட் அருந்தி - வேண்டாம் - டன்கின் டோனட்ஸ் எதற்கிருக்கிறான் - வழியில் ட்ரைவ் த்ரூவில் வாங்கிக்கொள்ளலாம் - 30 நிமிடங்கள், குளித்து, கும்பிட்டு, உடை மாற்றி - தேவையில்லை வந்து செய்துகொள்ளலாம் - so 10 நிமிடங்கள் - கூகிள் மேப்சை க்ளிக் செய்தேன் - 50 நிமிடங்கள் என்றது - மொத்தம் ஒரு மணி நேரமாவது ஆகும். முன்ன பின்ன ஆனாலும் - மற்றவர்களுக்கு முன்னால் சென்றடைந்து விடலாம். ஐந்து மணி சரிதான்... வீராப்பாக என் ஆபீசில் நண்பருடன் சேர்ந்து உடன் வேலை பார்க்கும் சில இளசுகளிடம் ( ஹ்ம்ம் -வெள்ளை முடி ஒன்று இரண்டு தெரிகிறது - இருந்தாலும் - முயற்சி செய்தால் நானும் இளசு என்று ஏமாற்றலாம் ஒரு நப்பாசை - இதற்கெல்லாம் காரணம் அதுவே - ஆனால் இன்னொரு 3, 4 வருடங்கள்தான் - ஆட்டத்தை மூட்டை கட்ட வேண்டியது தான் போலிருக்கிறது) -- " பசங்களா, சரியா கார்தால 6.30 மணிக்கு வந்துடனும். நான் கிட்-டோட கண்டிப்பா அங்கே இருப்பேன், பத்து பத்தரை வரையில் இருக்கலாம். சரியா!" - என்று மிரட்டி சவால் விட்டிருந்தேன். அனைவருக்கும் அவுட்லுக்கில் -- மீட்டிங் நோட்டிஸ் வேறு அனுப்பியிருந்தேன். ( ஹுக்கும்! சும்மா சொல்லக்கூடாது, ஈ-மெய்லும், அவுட்லுக்கும் இல்லாவிட்டால் ஆபீசில் என்னதான் செய்வார்களோ என்பதை பற்றி ஒரு தனி புத்தகமே எழுதலாம்! )
தனியாக வேறொரு கூட்டத்திடம் வெள்ளிகிழமை இரவு தலைவர் படம் பார்க்க நுழைவு சீட்டு வாங்க சொல்லி இருந்ததை மறந்துவிட்டேன். 9.30 மணிக்கு ஆரம்பம். முடிய 12.30 - 1.00 மணியாவது ஆகும். வீடு திரும்ப இரவு 2.00 - 2.30 மணி ஆகிவிடும்.
இதெல்லாம் போதாதென்று வீட்டில் அதுவரை இதைப்பற்றி கலக்காமல் இருந்தேன். சரிப்படாது என்றிருந்தபோது என் மனைவி சரி போய் வாருங்கள் என்று சுலபமாக கூறிவிட்டாள்.
போன வாரம் - வெள்ளி இரவு தூக்கம் - 2 மணி நேரம். ஹ்ம்ம்..
---
இம்முறை - வெள்ளி இரவு சினிமா கிடையாது..... இருந்தாலும் தூங்க செல்ல மணி இரண்டாகி விட்டது. (ப்லாக்கரில் புதிய அக்கவுண்ட் பதிவு செய்து கொண்டிருந்தேன்) - அடுத்த திரையரங்க விஜயம் - கமலின் "தசாவதாரம்"-தான் என்று நினைத்துக்கொண்டேன்.
காலை 5.00 மணி மீண்டும் ஒரு சவால் - உண்மை.
அதிசயமாக எழுந்தேன் - சரியான நேரத்திற்க்கு சென்றடைந்தேன் - மற்றவர்கள் வருவதற்கு முன். நல்ல விளையாட்டு - வேறொன்றும் இல்லை - கிரிக்கெட்- மட்டை பந்து தான். மூன்று வருடங்களுக்கு முன்னால் ந்யூ யார்க் சென்று வாங்கி வந்த "கிட்" - கடைசியாக உபயோகத்தில்.. நல்ல காஜி - இன்னும் ஒரு சிலர் அணியை சேர்ந்தால் நன்றாக இருக்கும்.
11.00 மணி வரை விளையாடி விட்டு வீடு வந்து, வாரக்-கடைசி வீட்டு சுத்தக் கடைமைகளை முடித்தேன் நேற்று. காம்காஸ்ட் கூப்பன் அனுப்பியிருந்தான். ஸோ On-Demand-ல் ஓரு ஒசி படம் பார்தோம். "The Departed" - நன்றாயிருந்தது - மனைவி குருதிப்புனல் என்றாள். த்ரோஹ்-கால் என்றேன் நான்.. - பற்பல சந்தேகங்கள் - ரீவைண்ட் செய்து புரிந்து - சின்ன விவரங்களை பாராட்டினோம் - மணி பார்க்கவில்லை.
மீண்டும் - மணி இரண்டு இரவு. நாசுவாவில் உள்ள நண்பர்கள் ஹாம்டன் பிச் அழைதிருந்தார்கள் - இம்முறை காலை ஐந்து அல்ல - ஏழு. இருந்தாலும் - உடல் வலியினால் சந்தேகப்பட்டேன்.. கொஞ்சம் தாமதம்.. ஆனால் சென்று வந்தோம். இதன் பலனாக என் மனைவியின் மூன்று வருட கனவு பலித்தது. "கிட்டரி மால்" சென்று நல்ல ஒரு தட்டு செட் வாங்கி வந்தோம்.
பீச்சில் இருந்து ப்லாக்க்ருக்கு சில படங்கள் அனுப்பினேன் (http://moblog001.blogspot.com).
கை, கால், முதுகு - உடம்பில் அனைத்து உருப்புகளும் வலி தாங்கவில்லை. எப்படிதான் இந்த விளையாடு வீரர்கள் இதையெல்லாம் அனுபவிக்கிறார்க்ளோ தெரியவில்லை. ஆன்ட்ரே அகாஸ்ஸி கடைசி போட்டி ஆடும் போது கண்டிப்பாக இளசு கிடையாது.. பயிற்சி-தான்
--
என்ன சொல்ல வருகிறேன் என்றால் -
ஒரு இரண்டு வருடங்களாக என் அன்பு மனைவி - சளைகாமல் சொல்லிக் கொண்டிருக்கிறாள். கொஞ்சம் உடற்பயிற்ச்சி செய்யுங்கள் என்று.. நேரம் இல்லை என்பேன் - ஐந்து மணிக்கு எழுந்திருங்கள் என்பாள்.
உடம்பு வலி - உடற்பயிறச்சி - அது சரியாக "டாலி" ஆகிறது.
ஐந்து மணி காலை சமாச்சாரம் -என்னை எழுப்பியது? யோசித்தேன் - எல்லாம் மனம் தான் காரணம். காலேஜ்ஜில் படிக்க எழுந்ததோடு சரி..
மனதில் ஒரு "தேவை" உற்பத்தி செய்து கொள்ள வேண்டும்.. மற்றவை தானே நடக்கும். எனக்கு இங்கு இவற்றை எல்லாம் செய்ய வேண்டும் என்ற திடமான எண்ணம் ஏற்பட்டதால்தான் இதெல்லாம்... ஹா! நான் சாக்ரடீஸ் அல்ல - இது பல முறை - பலர் சொல்லியிருக்கிறார்கள் - செய்திருக்கிறார்கள்.. ஆனால் எனக்கு இது மண்டைக்குள் ஏற இன்று வரை ஆயிருக்கிறது.
ப்லாக் செய்ய வேண்டும் என்று ஆசை பட்டிருந்தேன்.. தமிழில் இன்று வரை படிப்பதோது சரி.. - நேரம் இல்லை என்று தள்ளி போட்டிருந்தேன் - இந்த நிகழ்வுகளுக்கு பின் -என் மனைவி மீண்டும் மீண்டும் சொல்வது தான் ஒலிக்கிறது - "சீனு, you have to make time, நேரம் செய்து கொள்ளுங்கள்" - சற்றே யோசித்தால் தத்துவம் தான் - நேரத்தை உற்பத்தி ஆக்குவது - விவேக் ஸ்டைலில் - "ஆஹா" - என்றேன் -
அதனால் இன்று - "postpone செய்தது போதும். பொங்கி எழு மனோகரா!" ....
களம் இறங்குகிறேன்!!
--
சீனன்

Comments