Posts

Showing posts from 2017

ஸ்வேதபூதி த்ரிபுண்ட்ரேண ....

Image
 ஸ்வேதபூதி த்ரிபுண்ட்ரேண .... கவிதை நாமும் எழுதவோமென்று முக்கிமுயன்று ...  வாட்ஸாப்பில் நாலைந்து வரிகளெழுதிய தைரியத்தில் - இதோ இன்னொன்று ! மும்மூன்று கோடுகள் முறையாய் அணிந்தும் முக்கண் முதல்வனை முழுமையாக நினைந்தும் முக்கூடலிலும் மும்முறை மூழ்கி எழுந்தும் முத்துமாலையம்மனை முயன்றங்கு தரிசித்தும் தேடி தேடி தேவாலயங்கள் பல தாண்டியும் நாடி நாடி நமச்சிவாயவென்று நலத்திற்காகவே நமஸ்கரித்தும் கேள் கேள் என்று கேளாதவை எல்லாம் கேட்டென்ன ? சேர் சேர் என்று சேராதசெல்வம் சேர்த்தென்ன ? மகாதேவா! என்று மந்திரங்கள் முணுமுணுத்தென்ன ? பரமேஸ்வரா என்று பத்தியங்கள் பலவிருந்தென்ன ? பாரிலே பார்த்த பற்பல பஜனைகளில் பங்கெடுத்தென்ன ? பிறவிப்பயனறியாமல் பாசுரங்கள் மட்டுமே பாடியென்ன ? மானுடராய் பிறந்தவர்க்கு மட்டுமே மறக்காமல் அளித்த மனித நேயத்தை மருந்து போலாயினும் மகேஸ்வரா நீ எக்கணமும் அருந்தியறிந்திடவும் அறிந்டருந்திடவும் அக்கணமே  அருள் செய்வாய் அண்ணாமலையானே! இப்பூவுலகில் ஐம்புலனாலும் பொழுதென்றும் புரிகின்ற ஏனையபல புண்ணியத்தாலேயன்றி மண்ணுலகை மறந்தே சந்திரசூடனின் சரணத்தில் விண்ணுலகிலேயே வீ...

அடக்கியதும் அடங்கியதும்

Image
 அடக்கியதும் அடங்கியதும் ஒரு நாள் அலுவலகத்திலிருந்து பல சந்திப்புகளுக்குப்  பிறகு இரவில் மீண்டும் வீடு திரும்பிக்கொண்டிருந்த சமயம் ... ஆம் அது  நிகழ்ந்தது - இவ்வாறு நடந்ததேயில்லை - அடக்கமுடியாத நிலைமை - எந்த நிமிஷமும் இதோ பீறிட்டுக்கொண்டு வந்துவிடும் என்று தோன்றியது - வாகனம் செலுத்தும்போதே செய்துவிடலாமா என்றெண்ணினேன்- மனைவி தூங்கியிருக்கமாட்டாள் - வீடு சீக்கிரம் சென்றடைய வேண்டும்  - கவனம் கலைந்துவிட்டால் என்ன செய்வதென்று தவித்தேன் சிறிது - ரோட்டிலேயே காரை   நிறுத்தி சாந்த படுத்திக்கொள்ளலாமா என்றெண்ணினேன் - மற்றவர் பார்க்க  பார்க்க  செய்ய தைரியமும் இல்லை -  காரில் குளிர் சாதனம் வேறு வேலை செய்யாததனால் ஜன்னல்களை வேறு திறந்துவைத்திருந்தேன் - இது சௌகரியமோ?  மற்றவர் கவனித்து விட்டால் என்ன செய்வது? பரவாயில்லை இரவு நேரம் தானே - நள்ளிரவிற்கு வெகு தூரமில்லை - தவிர இது என் வாகனம் - இங்கிருந்து நான் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் ... முடிவு செய்து மற்றவர்களை பற்றி கவலையில்லாமல் - லாவகமாக முனைந்தேன் .... நிஜம்தான்  செய்தேவிட்டேன் - நம்பமாடீர்கள்...