Posts

Showing posts from January, 2019

பொங்கலோ பொங்கல்!

 பொங்கலோ பொங்கல்!  வெங்கலத்தினாலேயே   ஆயிருந்தபோதிலும்  விண்கலத்தை அடைந்ததென்ற இன்பம்தரும்  பொங்கலோ பொங்கல்!  மண்கலத்தில்  வெல்லச்சோறு வெந்திருந்தபோதிலும்  செம்பொன்கலத்தில்  பெற்றதென்ற மாறுதரும்  பொங்கலோ பொங்கல்!  மஞ்சளிட்ட  மங்கையர்தன் , மன்னவர்தம் கரம்பிடித்து  சூரியர்தம்  கதிர் கண்டு,  போரடித்த கதிர் கொண்டுதரும்  பொங்கலோ பொங்கல்!  அரும்புமீசை ஆண்களும், குறும்புமிக்க  பெண்களும்  விரும்பியேகி. இன்றுமட்டும்,  கரும்பு தின்னும்  அழகைத்தரும்  பொங்கலோ பொங்கல்!  காலையெல்லாம் களித்திருந்தும்,  மதியம் ஒரு பெருவிருந்தும்,  மாலை சாயும்  வேளையிலே, வாழ்த்து சொல்லும்  இங்கே ஒரு கவி-தைப்-பொங்கலோ பொங்கல்! -- சின்னப்பயல் சீனன்