மொக்கை மேட்டர் - தமிழ்ப்பேச்சா தமிழ்போச்சா ?
. உலகெங்கும் உள்ள 8 கோடி தமிழ் நண்பர்கள் அனைவருக்கும், என் இதயங்கனிந்த தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்! ஆமாம் தமிழ் நாட்டில் மட்டும் சுமார் ஆறரை கோடி தமிழ் மக்களாம்!. மற்ற இடங்களிலெல்லாம் சேர்த்து இன்னொரு ஒன்றரை கோடி மக்கள். அம்மாடியோவ் ! இப்படிப்பட்ட தமிழ் மக்களின் தமிழ் நாட்டில் புத்தாண்டு தினம் நிறைவடைகின்ற வேளையில் ஒரு சிறு எழுத்து | இந்த புத்தாண்டில், தமிழர்கள் நாம் யாவரும், பிறதமிழருடனும், அவரவர்கள் வீட்டிலும், குழந்தைகளுடனும் தமிழிலேயே பேசவேண்டும் என்பது சிறிய வேண்டுகோள். (முடிந்தவரையில் என்று எழுத எத்தனித்து அதை எறிந்துவிட்டேன், நம்மால் முடியும் என்றெண்ணி!) --- நம் செம்மொழி தமிழ்மொழி நாட்டவர் வீட்டவர் வழக்கிலிருந்து விலகிவிடாமலிருக்க நம்மால் இயன்ற ஒரு பேருதவியாக இருக்கும். இப்போதிருக்கும் நிலைமையில், முக்கியமாக பெருநகர்வாழ் மக்களான நாம், நம் ஆங்கிலவசப்பட்ட பிள்ளைகளுடனும் பேரப்பேத்திமார்களோடு வீட்டிலே பேசும்போது கூட, கூடியசீக்கிரமே குடும்பங்களில் தமிழ் ஓய்ந்து விடுமோ என்ற ...