மொக்கை மேட்டர் - தமிழ்ப்பேச்சா தமிழ்போச்சா ?
.
உலகெங்கும் உள்ள 8 கோடி தமிழ் நண்பர்கள் அனைவருக்கும், என் இதயங்கனிந்த தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்!
ஆமாம் தமிழ் நாட்டில் மட்டும் சுமார் ஆறரை கோடி தமிழ் மக்களாம்!. மற்ற இடங்களிலெல்லாம் சேர்த்து இன்னொரு ஒன்றரை கோடி மக்கள். அம்மாடியோவ் ! இப்படிப்பட்ட தமிழ் மக்களின் தமிழ் நாட்டில் புத்தாண்டு தினம் நிறைவடைகின்ற வேளையில் ஒரு சிறு எழுத்து |
இந்த புத்தாண்டில், தமிழர்கள் நாம் யாவரும், பிறதமிழருடனும், அவரவர்கள் வீட்டிலும், குழந்தைகளுடனும் தமிழிலேயே பேசவேண்டும் என்பது சிறிய வேண்டுகோள். (முடிந்தவரையில் என்று எழுத எத்தனித்து அதை எறிந்துவிட்டேன், நம்மால் முடியும் என்றெண்ணி!) --- நம் செம்மொழி தமிழ்மொழி நாட்டவர் வீட்டவர் வழக்கிலிருந்து விலகிவிடாமலிருக்க நம்மால் இயன்ற ஒரு பேருதவியாக இருக்கும்.
இப்போதிருக்கும் நிலைமையில், முக்கியமாக பெருநகர்வாழ் மக்களான நாம், நம் ஆங்கிலவசப்பட்ட பிள்ளைகளுடனும் பேரப்பேத்திமார்களோடு வீட்டிலே பேசும்போது கூட, கூடியசீக்கிரமே குடும்பங்களில் தமிழ் ஓய்ந்து விடுமோ என்ற அச்சம் நம் அனைவரின் உள்ளங்களிலும் தோன்றுவதை கவனிக்காமல் இருப்பதில்லை என்பதென்னமோ பேருண்மை. கொஞ்சம் சிந்தித்து பாருங்கள்! உண்மைதானே ? இந்தியாவில் தமிழ்நாட்டில் உள்ளவர்கள் நாம்...தமிழ் பேசும்போதே கலப்படமில்லாமல் பேச முடிகிறதா என்று சிறிதேனும் எண்ணிப்பாருங்கள். சிங்கப்பூரிலும் சிங்களத்திலும் மலேசியாவிலும் நாட்டுதமிழ் மக்களிடையே அருமையான களங்கமில்லாத்தமிழ் தவழ்கிறது. ஆனால் இங்கேயோ - ஒவ்வொரு வார்த்தையாக புழக்கலிருந்து அகன்று கொண்டே வருகிறது. வார்த்தைகளென்ன, தமிழ் ஒலிக்க வேண்டிய இடங்களில், வெறும் தமிழ் உரையாடலே கரைந்து போய்க்கொண்டிருக்கிறது. பற்பல வேற்று மொழிச்சொற்கள் நம் அன்றாட வாக்கியங்களில்.
நானே ஒரு குற்றவாளி. என்ன பிள்ளைகளை முழுதாக தமிழிலே பேச வைப்பதே ஒரு மிகப்பெரிய அசுரசாதனைதான். அவர்களை சொல்லி குற்றமில்லை, அவர்களின் நண்பர்களனைவரும் வேற்று மாநிலத்தார்/மொழியினர் - பள்ளியில் ஆங்கிலத்தில் மட்டுமே பேசவேண்டும் என்ற நியதி -- என்னதான் செய்வார்கள். என்போல் சிலர் வாழ்வதோ தமிழ் நாட்டிலல்ல - அதனால் வீட்டிலும் அண்ணன் தம்பியிடையேயும் அக்காள்தங்கையிடையேயும் கூட ஆங்கிலந்தான்.
ஹிந்தி வேண்டாம், சம்ஸ்க்ருதம் வேண்டாம், விழாக்களில் தமிழில்தான் இறைவணக்கம் பாட வேண்டும், என்றெல்லாம் சொல்லும், நம் அறிய மக்களிடம் ஆங்கிலத்தின் ஆதிக்கத்தை முதலில் அடையாளம் கண்டுகொள்ள காட்டவேண்டாமா ? மற்ற மொழிகளினால் தமிழுக்கு ஆபத்தில்லை. ஆங்கிலத்தால் உண்டு என்பது அப்பட்ட உண்மை.
"ஏம்பா கடைக்கு போயிட்டு வரியா?" - சரி தமிழ் வாக்கியந்தான். "இல்லை நான் ஸ்கூலுக்கு போகணும்" - தினசரி உபயோகப்படுத்தக்கூடிய சராசரி வாக்கியத்திலேயே தமிழல்லாத "ஸ்கூல்" என்ற வார்த்தை பலகாலமாக புழக்கத்தில் உள்ளது. "இன்னிக்கு ஓட்டலில் சாப்பிடலாம்", "அப்பா எனக்கு புக்கு வாங்கி தரியா"?, "டேய் வாங்கடா மாலுக்கு போகலாம்", "மேடம்! அப்டியே லம்பா எடுத்துக்குங்க! சீப்பா இருக்கு", "ஏய். நாளைக்கு மீட் பண்ணலாமாடி?", "ப்ளீஸ், கடுப்பேத்தாதே " - இப்படி நிறைய வார்த்தைகள் சராசரி பேச்சு வழக்கில் உள்ளவையே! நிறையபேருக்கு முக்கியமாக நம் குழந்தைகளுக்கும், தமிழ்நாட்டில் தமிழ் கற்கும் இளைஞர்களுக்கும் கூட, இவைகளில் சிலவற்றிற்கு ஆங்கில வார்த்தையை தவிர வேறு தமிழ் வார்த்தை தெரியுமா என்பதே ஒரு கேள்வி! என் வீட்டில் வேலை செய்யும் பணிப்பெண்ணிடம் சிலசமயம் பேசும் போது - "அய்ய! என்ன சார் ! சென்டர் தமில்-தான் சார்!" - என்று அவள் சொல்ல கேட்க்கும் போது அழுவதா சிரிப்பதா என்றறியாமல் திகைக்க வேண்டியதுதான். "மேடம், நேரா போய் அந்த பிரிட்ஜ் தாண்டி லெஃப்ட் எடுத்தா ஒரு பில்டிங் - அங்கதான் மேடம் இருக்கு" - இது தமிழா இல்லையா? இந்த நிலைமையில் செந்தமிழ் பேசுவதென்பது, அதை எதிர் பார்ப்பது மிகக்கடினம். அதனால் சராசரி மக்கள் தமிழில் பேச முயன்றாலே போதுமென்ற, இடத்துக்கு வந்து விட்டோம் - சிறிது தமிழறிந்தவர்கள்/படித்தவர்கள் முடிந்தவரை தமிழ் சொற்களையே பயன்டுத்தலாமோ? - சரி முயல்வோமா?.
இதில் இன்னொரு சிக்கல். தமிழில் பேசும் பொது - அதில் பாதிக்கு மேல் கலப்படமில்லாமல் பேசுவது அரிது. இந்நிலையில் - நம் இளைஞர்களிடையே கொச்சையான பல புதிய "சத்தங்கள்" பிரபலமாகியிருக்கும் காலம் இது. (இவை எல்லாம் "வார்த்தைகளும், சொற்கட்டுக்களும்" என்று சொல்லி அழைக்க இவைக்கு தகுதி உள்ளதா? என்று யோசிக்க வேண்டியிருக்கிறது) - - "மச்சி", "மொக்கை", "ஓ போடு", "ஆக்கோ", "டப்பு", "தூள்", "கொய்யா", "கூதல்", "கில்மா", "கூல் மா", "கன்பீஸ் பன்னாதே (!)" என்றெல்லாம் இன்னும் பலப்பல, இதில் புதிதாக இதை விஜய், சன் டி.வி போற்ற தொலைக்காட்சி அலைவரிசைகளில் - இன்னும் படம் பிடித்து - உலகமெங்கும் "தமிழ் நிகழ்ச்சிகள்" என்ற பேரில் சாமானியர்களிடையே பிரபலப்படுத்துகிறார்கள். ஒரு தொகுப்பாளர் விடாமல் அனைவரும் தவறாமல் தமிழை வெகு லாவகமாக ஒவ்வொரு சொல்லாக கொன்று போடுகிறார்கள். சிறுவர்கள் எப்படித்தான் எது தமிழ் எது அல்ல என்றிவார்களோ? இவற்றையெல்லாம் கேட்கும் போதும் - "அய்யா" போய் "சார்" வந்ததும் , "அம்மா" போய் மேடம் வந்து நிரந்திரமாக குடியிருப்பதையும் கண்டால் இது தமிழ் பேச்சா இல்லை தமிழே போச்சா என்று மட்டுமே கேட்கத்தோன்றுகிறது , சரி அப்பப்போது ராஜாவும், பாரதி பாஸ்கரும், சாலமன் பாப்பையாவும் தமிழென்றால் என்னவென்று சிறப்புபட்டிமன்றங்களில் காட்டுவதனாலோ கொஞ்சமாவது பைத்தியம் பிடிக்காமல் இருக்கிறது ? (சரி! சரி! அதைச்செய்வதும் சன்/விஜய் தான். உண்மை)
காலம் சென்றபின், "தமிழ்" என்ற வார்த்தையை தவிர , தமிழில் பேச்சில் மற்ற வார்த்தைகள் விட்டகன்றிடுமோ என்ற பயம் இருக்கத்தான் செய்கிறது. தமிழ் விரியும் வளரும், சரிதான். சராசரி தமிழர்களின் தமிழ் ஆளுமையும் திறனும் வளரவேண்டாமா ? நான்கு எழுத்தாளர்களும், கவிஞர்களும் எழுதிவிட்டால் போதாது. ஒவ்வொரு வீட்டிலும் களங்கமில்லாத்தமிழ் ஒலிக்க வேண்டாமா? ஆனால் ஒழிப்பதிலே , நாமே பங்காளராக இருக்கின்றோம் - நம் நடவடிக்கைகளினால்.
சரி பேசுவதுதான் இல்லை - தமிழ் படிப்பதுதான் எங்கே ? இலக்கியமாவது? காப்பியமாவது? என் வயதைச்சேர்ந்த தமிழர்கள் இன்னும் கல்கி, பொன்னியின்செல்வன் போன்ற எழுத்துக்களை படித்து வருகின்றனர். சிலர் வீடுகளில் இன்னும் தினபத்திரிக்கையாவது வாங்கி படித்து வருகின்றனர். ஆனான் இளைஞர்களும் குழந்தைகளும், ரோவால்ட் டால்ஹ், எனிட் பிலிட்டன், ஜெ கே ரவ்லிங், ஹார்ரி பாட்டர் போன்ற புத்தகங்களையே படிக்கின்றனர். தமிழ் படிப்பு எப்போதுதான் நடக்கும்?
வாட்சப்பிலும், எஸ்.எம்.எஸ் யிலும் (இவைகளுக்கு இங்கு சுத்த தமிழ் வார்த்தை எழுதினால் எனக்கே புரியாது) தமிழ் எழுதினாலும் - ஆங்கில எழுத்துக்களுடனே தானே சல்லாபம். அதனால் மிக விரைவில் - தமிழை தமிழால் எழுதுவதும் நின்றுவிடும் அபாயம் இருக்கிறதா ? இல்லையா ?
எப்படித்தான் இம்மாதிரியான நிலையிலிருந்து தமிழை, தமிழரை மீட்பது? மற்ற தமிழ் நண்பர்களுக்கும் இச்செய்தியை கேள்வியை அனுப்பவும்.
உங்கள் கருத்து என்ன ? உங்கள் நண்பர் என்ன நினைக்கிறார்? தடியை வைத்துக்கொண்டு நம் மக்களிடையே தமிழில் பேசவேண்டும் என்று மிரட்டுவாதா? இல்லை தாய் தந்தை அன்பாக அவரவர் குழந்தைகளுக்கு எப்பொழுதும் நினைவூட்டிக்கொண்டே இருக்கவேண்டுமா? இல்லை அரசு ஏதேனும் செய்ய வேண்டுமா? இல்லை என்னதான் செய்வது?
--
சீனன்

Comments