வா சித்திரகுப்தா, வா! - (அர்த்தமற்ற அட்டகாசம்)
ஏதாவது செய்ய வேண்டும் என்று என் மனைவி ரொம்ப படுத்திய பின்னர் ஒரு வியாழன் இரவு - சின்ன பயல்கள் நடிக்க வேண்டும் என்று ஒரு சிறிய நாடகம் எழுதினோம். நியூ இங்கிலாந்து தமிழ் சங்கம் பொங்கல் கலை விழாவில் மேடை ஏறியது இந்த நாடகம். நல்ல சில பின்னூட்டங்கள் வந்ததினால் இதை இந்த வலைபதிவில் பதிக்கிறேன். கதை எழுதியது இரண்டு மணி நேரம்.. ப்ராக்டிஸ் பண்ண வைத்தது பற்பல மணி நேரம் - மூணு வால்-சை வைத்து .. யம்மா பெண்டு கழண்டு விட்டது .. குறிப்பு:- இந்த நாடகத்தில்/கதையில் வரும் நிகழ்ச்சிகள் மற்றும் கதா பத்திரங்கள் அனைத்தும் கற்பனையே. தயவுசெய்து நகைச்சுவை கண்ணோட்டத்துடன் மட்டும் படித்து ரசிக்கவும். யாரையும் அல்லது எந்த நம்பிக்கைகளையும் புண் படுத்துவது நோக்கம் இல்லை.படித்து ரசியுங்கள். -------------------------------------------------------------------------------- ஜனவரி 15 2010. பதிப்பு 0.3. காப்புரிமை:- தேவி-வீட்டான் (kutti at hotmail dot com) Copyright (C) 2010 தேவி-வீட்டான் (kutti at hotmail dot com) This work is licensed under http://creativecommons.org/licenses/by-...