வா சித்திரகுப்தா, வா! - (அர்த்தமற்ற அட்டகாசம்)
ஏதாவது செய்ய வேண்டும் என்று என் மனைவி ரொம்ப படுத்திய பின்னர் ஒரு வியாழன் இரவு - சின்ன பயல்கள் நடிக்க வேண்டும் என்று ஒரு சிறிய நாடகம் எழுதினோம். நியூ இங்கிலாந்து தமிழ் சங்கம் பொங்கல் கலை விழாவில் மேடை ஏறியது இந்த நாடகம். நல்ல சில பின்னூட்டங்கள் வந்ததினால் இதை இந்த வலைபதிவில் பதிக்கிறேன்.
கதை எழுதியது இரண்டு மணி நேரம்.. ப்ராக்டிஸ் பண்ண வைத்தது பற்பல மணி நேரம் - மூணு வால்-சை வைத்து .. யம்மா பெண்டு கழண்டு விட்டது ..
குறிப்பு:- இந்த நாடகத்தில்/கதையில் வரும் நிகழ்ச்சிகள் மற்றும் கதா பத்திரங்கள் அனைத்தும் கற்பனையே. தயவுசெய்து நகைச்சுவை கண்ணோட்டத்துடன் மட்டும் படித்து ரசிக்கவும். யாரையும் அல்லது எந்த நம்பிக்கைகளையும் புண் படுத்துவது நோக்கம் இல்லை.படித்து ரசியுங்கள்.
--------------------------------------------------------------------------------
ஜனவரி 15 2010. பதிப்பு 0.3.
காப்புரிமை:- தேவி-வீட்டான் (kutti at hotmail dot com)
Copyright (C) 2010 தேவி-வீட்டான் (kutti at hotmail dot com)
This work is licensed under http://creativecommons.org/licenses/by-sa/3.0/us/ in the US and under http://creativecommons.org/licenses/by-sa/2.5/in/ in
India.
குறிப்பு:- இந்த நாடகத்தில்/கதையில் வரும் நிகழ்ச்சிகள் மற்றும் கதா பத்திரங்கள் அனைத்தும் கற்பனையே. தயவுசெய்து நகைச்சுவை கண்ணோட்டத்துடன் மட்டும் படித்து ரசிக்கவும். யாரையும் அல்லது எந்த நம்பிக்கைகளையும் புண் படுத்துவது நோக்கம் இல்லை.
குறிப்பு 2 :- இந்த நாடகம் நியூ இங்கிலாந்து தமிழ் சங்கம் 2010 பொங்கல் கலை விழாவில் பிப்பிரவரி 6 ஆம் தேதி லிட்டில்டன், மாசசூசட்சில் வழங்கப்பட்டது.
வா சித்திரகுப்தா, வா!
(அர்த்தமற்ற அட்டகாசம்)
கருத்து, வசனம், : தேவி-வீட்டான்
உதவி, ஊக்கம்: புவனா, ஸ்ரீ-லக்ஷ்மி.
குரல்: வெகுகாலமாக ஹை ப்ரோபைல் டார்கட் ஒன்றை கொண்டு வர முடியாமல் எமன் தவித்து கொண்டிருக்கிறார். பூத கணங்கள் சொதப்பிவிட்டர்கள். சித்திர குப்தன் தானே சென்று வருகிறார்..
காட்சி ஒன்று (இடம்: எம லோகம், பாத்திரங்கள்: குரல், எமன், சித்ரா, கல்தூண் மற்றும் எருமை)
குரல்: எம லோகத்தில் ஒரு நாள் ....
எமன்: தென்னாடுடைய சிவனே போற்றி!!
என்னாட்டவற்கும் இறைவா போற்றி!!
போற்றி போற்றி !!
அப்பா என்னை காப்பாத்துப்பா !!
குரல்:- அட, எம தர்ம ராஜாவா!! உங்களை? காப்பாத்தனுமா?
எமன்:- ஆமாம் ... ஆமாம்!
இவன் எங்கே போய்ட்டான்?
சித்ரா .... சித்ரா ... சித்ரா!!
சித்ரா:- (ஓடி வருகிறான்) - வந்துட்டேன் ராஜா. வந்துட்டேன்!!.
ப்ளீஸ்!! (கெஞ்சலும் கோபமுமாக) என் பேரு சித்திரகுப்தன் !!
சரி சரி - என்ன வேணும் ராஜா?
எமன்:- அமெரிக்கா போன விஷயம் என்ன ஆச்சு?
சித்ரா:- (அசடு வழிய...) அது.... அது.... அது.... அது....
நான் போகவேயில்லை!!
எமன்:- இப்போ என்னய்யா ப்ரோப்லம்? (நீட்டி முழக்கி)
சித்ரா:- "விசா"-வே கிடைக்கலை ராஜா!!!
எமன்:- என்னது "விசா" கிடைக்கலியா ?!!
சித்ரா:- ஆமாம். யாருக்கு வொர்க் பண்றே-ன்னு கேட்டாங்க .... ஏமன்(Yemen) - ன்னு சொன்னேன்....
எமன்:- Oh! Man !! ..... Yemen இல்லப்பா ... எமன் . எமன் .. Possible Terrorist-nnu துரத்திட்டாங்க ...
கஷ்டம் கஷ்டம்.... எல்லாம் என் தலைஎழுத்து !!
சித்ரா:- மன்னிச்சுக்குங்க ராஜா !!!
(அனைத்து பாத்திரங்களும் ப்ரீஸ்... , காட்சி மாற்றம்)

காட்சி இரண்டு (இடம்: செம-லோகம், பாத்திரங்கள்: குரல், சித்ரா, எ-மேன், கல்தூண்)
குரல்: நம்ம செம-லோகத்தில் சில நாள் பிறகு ... (அதாவது பூ லோகத்தில் கொஞ்ச நாளைக்கு அப்புறம்).
எ-மேன்: (A-MAN) vroom vroom vroom.
ஐ ஆம் ஸ்பீட்.....! ஐ ஆம் லைட்னிங் மேக்குவீன் .... !!!
(விடியோ கேம் விளையாடிக்கொண்டே)
சித்ரா: (தோரணையாக) வா....ப்பா...! உன்னோட டைம் ஆச்சு! . வாப்பா போலாம்!!.
(கையில் சுருக்கு கயிறுடன்) காட்-டு-கோ (gotta-go!)
எ-மேன்: ப்ளீஸ்... ப்ளீஸ் .. ஜஸ்ட ஒரே ஒரு கேம் .. ப்ளீஸ்!
(மீண்டும் வீடியோ கேம்). வ்ரூம்... வ்ரூம் ... வ்ரூம்
சித்ரா: (கொஞ்சம் கெஞ்சி) படுத்தாதே ..அவ்ளோதான் .. போலாம் போலாம்
காட்-டு-கோ (gotta-go)
எ-மேன்: ஜஸ்ட திஸ் ஒன் கேம். ப்ளீஸ்... ப்ளீஸ்

சித்ரா:- (ரொம்ப கெஞ்சி, ஒன்று/இரண்டை அடக்கிக்கொண்டு ) ஐயோ...
வாப்பா.. காட்-டு-கோ (gotta-go)
எ-மேன்: சரி .. சரி சரி .. இதுக்கு ஒரு ஐடியா பண்றேன் .. ஒகே??
சித்ரா:- (வேறு வழியில்லாமல்) ஒகே!! ... ஒகே !!!
எ-மேன்: இம் ம் ம் ம் ம் ...
இங்கி-பிங்கி-பாங்கி ... பாதர் ஹெட் எ டாங்கி ...
(முதலில் தவறாக ஆரம்பித்து.. பின்னர் சுதாரித்து சரியாக)
இங்கி-பிங்கி-பாங்கி பாதர் ஹெட் எ டாங்கி ...
சாரி... யூ லூஸ்! ஐ வின். பை பை .. சீ யூ!!

சித்ரா:- ராமா ....

காட்சி மூன்று (இடம்: எம-லோகம், பாத்திரங்கள்: குரல், சித்ரா, எமன், கல்தூண்)
குரல்: மீண்டும் எம லோகத்தில் ...
எமன்:- சித்ரா ..... சித்ரா ..... சித்ரா ...!!
சித்ரா:- (ஓடி வருகிறான்) - வந்துட்டேன் ராஜா ... வந்துட்டேன்!!.
(கெஞ்சி) ப்ளீஸ் .. ப்ளீஸ்............!! என் பேரு சித்திரகுப்தன் !!
எமன்:- சரி சரி அத விடு. நம்ம ஹை ப்ரோபைல் டார்கெட் என்ன அச்சு?...

எமன்:- இப்போ என்னய்யா ப்ரோப்ளம்? (நீட்டி முழக்கி)
சித்ரா:- கொண்டு வற மறந்து போயிட்டேன்?
எமன்:- ஆங்?
சித்ரா:- (ரொம்ப பரபரப்பாக) ராஜா ....
சுப்பரா ஒரு கேம் விளையாடினேன் .. ராஜா..
கார்ஸ் கேம் " நின்ட்டேன்டோ வீ " ...
ரொம்ப சூப்பர்..
ஆ-சம்!! (awesome)
எமன்:- மோ-சம்! மோ-சம். ரொம்ப மோ-சம்.
போயி அவனை இப்பவே கொண்டாய்ய்யா..

காட்சி நான்கு (இடம்: எமலோகம், பாத்திரங்கள்: குரல், எமன், எ-மேன், கல்தூண்)
குரல்: எமன் படும் தொல்லை தாங்காம பூலோக மனிதன் (எ-மேன்) தானே நேராக எம லோகம் போனான்.
எ-மேன்: ஹல்லோ! எனி-படி ஹோம்? க்நோக்-க்நோக்..
எமன்:- ஹூஸ் தேர்?
எ-மேன்: ஐ ஆம் எ மேன் - ஹியர்.
எமன்:- ஆங்? நாந்தானே எமன்.. யார்ரா இது? ஓ நீயா?
(ஆச்சரியமாக) எப்படி இங்கே வந்தே?
எ-மேன்: ப்ளைட்டில தான் !
இப்போ எல்லாம் நிறைய ப்ளைட் டைரேக்க்டா எமலோகத்துக்கே வருதே.
எமன்:-சரி வந்தியே - என் மேல ஒரு பாட்டு பாடலாமே ..
எ-மேன்: ஒகே.. (தொண்டையை சரி செய்து கொண்டு) ஏறுமயில் ஏறி விளையாடு முகம் ஒன்றே..
ஏறுமயில் ஏறி விளையாடு முகம் ஒன்றே..
எமன்:- ஆங்?? என்னது ???
எ-மேன்: சாரி! சாரி! எருமையில் ஏறி விளையாடு முகம் ஒன்றே..
எருமையில் ஏறி விளையாடு முகம் ஒன்றே..
எமன்:- (சந்தோஷமாக) ம்ம்ம்ம்! அப்படி! அப்படி! ... சரி.... உனக்கு சொர்க்கமா நரகமா? பாப்போமா? Heaven or Hell?
எ-மேன்: Well! ஒரு டெஸ்ட் வச்சு பாருங்க.
எமன்:- டெஸ்டா? (பயந்து போய் .. தருமி ஸ்டையிலில்) கேள்விகளை நானே கேக்கிறேன்ப்பா!!
எமன் எ-மேன்
சேர்ந்தே இருப்பது? பிஸ்ஸாவும் சீசும்
சேராது இருப்பது? இந்தியாவும் பாகிஸ்தானும்
பார்க்கக் கூடாதது? கிச்சனில் டயப்பர்!
பார்த்து ரசிப்பது? அவதார் மூவி!
அதிரடிக்கு? அமெரிக்கா!
அமைதிக்கு? இந்தியா!
அழகுக்கு? ஐ-போன்!
ஆக்கத்த்துக்கு கூகிள்-போன்!
ஆசைக்கு? நீ!
அறிவுக்கு? நான்!
எமன்:- அய்யா சாமி .. ஆளை வுடு! இது சரிப்படாது!...
யாரங்கே .. "ஹிஸ் ரெக்கார்ட்ஸ் ப்ளீஸ்"

காட்சி ஐந்து (கடைசி காட்சி) (இடம்: எமலோகம், பாத்திரங்கள்: குரல், எமன், எ-மேன், கல்தூண்)
எமன் + எ-மேன் (இருவரும்):- சித்ரா... சித்ரா ... சித்ரா ..!!!
சித்ரா: (கடுப்பாக) வந்துட்டேன்யா ..... !!
எமன்: இவனுக்கு எவ்ளோ பாயிண்ட்ஸ் இருக்கு?
இவனோட ரிகார்ட்ஸ் எல்லாம் எடுய்யா..
சித்ரா: ரிகார்ட்ஸ்-ஆ?? (பயம் பின்னர் அசடு வழிய..) அது.. வந்து .. அது... அது.. ம்ம்ம்ம் ..
எமன்: இப்போ என்னய்யா ப்ராப்ளம்?
சித்ரா: பூமிக்கு கொண்டு போன லேப்டாப்-ல கம்ப்யூட்டர் வைரஸ் வந்திருக்கு..... கிராஷ் ஆயிடுச்சு!!!
எமன்: ஆங்? வைரஸா - என்ன வைரஸ்?
சித்ரா + எ-மேன் (இருவரும்): H1N1
(அனைத்து பாத்திரங்களும் ப்ரீஸ்... , இசை .. )
குரல்: (சன் டிவி நிர்மலா பெரியசாமி ஸ்டையிலில்... ) வணக்கம். இது எமலோக வானொலி நிலயம். திடீர் செய்தி அறிக்கை. பெரும் சொதப்பல் காரணத்தினால் சித்திரகுப்தன் இன்று வேலை நீக்கம் செய்யபட்டார். அந்த பதவிக்கு நீங்கள் அணுக வேண்டிய முகவரி எமலோகம்.ஒர்க். இது ஒரு நான்-பிராபிட் ஆர்கனைசேஷன். மற்ற தகவல்கள் இன்றிரவு எட்டு மணிக்கு. கேட்கத் தவறாதீர்! நன்றி வணக்கம்.
முற்றும்

--
சீனன்
Comments