ஸ்வேதபூதி த்ரிபுண்ட்ரேண ....

 ஸ்வேதபூதி த்ரிபுண்ட்ரேண ....

கவிதை நாமும் எழுதவோமென்று முக்கிமுயன்று ...  வாட்ஸாப்பில்
நாலைந்து வரிகளெழுதிய தைரியத்தில் - இதோ இன்னொன்று !





மும்மூன்று கோடுகள் முறையாய் அணிந்தும்
முக்கண் முதல்வனை முழுமையாக நினைந்தும்
முக்கூடலிலும் மும்முறை மூழ்கி எழுந்தும்
முத்துமாலையம்மனை முயன்றங்கு தரிசித்தும்

தேடி தேடி தேவாலயங்கள் பல தாண்டியும்
நாடி நாடி நமச்சிவாயவென்று நலத்திற்காகவே நமஸ்கரித்தும்
கேள் கேள் என்று கேளாதவை எல்லாம் கேட்டென்ன ?
சேர் சேர் என்று சேராதசெல்வம் சேர்த்தென்ன ?

மகாதேவா! என்று மந்திரங்கள் முணுமுணுத்தென்ன ?
பரமேஸ்வரா என்று பத்தியங்கள் பலவிருந்தென்ன ?
பாரிலே பார்த்த பற்பல பஜனைகளில் பங்கெடுத்தென்ன ?

பிறவிப்பயனறியாமல் பாசுரங்கள் மட்டுமே பாடியென்ன ?

மானுடராய் பிறந்தவர்க்கு மட்டுமே மறக்காமல் அளித்த
மனித நேயத்தை மருந்து போலாயினும் மகேஸ்வரா நீ
எக்கணமும் அருந்தியறிந்திடவும் அறிந்டருந்திடவும்
அக்கணமே  அருள் செய்வாய் அண்ணாமலையானே!

இப்பூவுலகில் ஐம்புலனாலும் பொழுதென்றும் புரிகின்ற ஏனையபல புண்ணியத்தாலேயன்றி
மண்ணுலகை மறந்தே சந்திரசூடனின் சரணத்தில்
விண்ணுலகிலேயே வீற்றிருக்க விரைந்தங்கு வருமோ வரவேற்பிதழ்?
அன்றி பூக்காத பல பூம்பொன் பூக்களாலே பூஜிப்பதாலே மட்டுமோ ? 



--
சின்னப்பயல் சீனன்

Comments