என் இனிய இயந்திரா - பாகம் ஒன்று - மோடோரோலா இட்ராய்ட்
பெருமதிப்பிற்குரிய திருவாளர் சுஜாதா அவர்கள் இன்றிருந்தால் - பெருமிதப்படுவாரா இல்லை வழக்கு போட்டு என்னை நீதிமன்றத்திற்கு அழைப்பாரா என்று தெரியவில்லை... ஆனால் இன்றைக்கு கூகிள் மற்றும் வெரைசான் - அறிமுகப்படித்தயிருக்கும். மோடோரோலா இட்ராய்ட் (Motorola DROID) போனை நான் இப்படித்தான் அறிமுகப்படுத்த வேண்டும்.
---
போனவாரம் ஒரு நண்பருக்கு ஒரு உதவி செய்கிறேன் என்று சொல்லியிருந்தேன். உதவியின் வேளை வந்தது - எனக்கு வேறு சில பணிகளை முடிக்க நேரம் போத வில்லை - அவர் என்னை பல முறை போனில் அழைத்தும் - போன் - சத்தம் செய்யவில்லை - அனைத்து அழைப்புகளும் கிணற்றில் விழுந்து - அவர் கொஞ்சம் தவித்து போய் - எப்படியோ வீட்டு எண்ணை கண்டுபிடுத்து - கடைசியில் பேசினோம் . எல்லாம் சுபமாக முடிந்தது.
ஆனால் நான் விஷயத்தை அங்கே விடவில்லை - ச்சே... மொபைல் போனே வேண்டாம் ... பாழாப்போன போன் .. ரொம்ப கஷ்டம்ப்பா .. இதை குப்பையில் போட வேண்டும் என்று சத்தமாக அலுத்துகொண்டேன்.. என் மனைவி காதில் விழும்படியாக மீண்டும் ஓரிரு முறை சத்தமாக ஆர்பாட்டம் செய்தேன் - அதை தவிர, வெகு நாட்களாகவே - - ரொம்ப லாவகமாக அப்பப்போது போனை என் இளைய புத்திரனிடம் அகழ்வாராய்ச்சி செய்ய கொடுத்து பழக்கியிருந்தேன். சில சமயம் அவன் என் போனை சாப்பாட்டு தட்டாகவும், பியானோவாகவும், மிருதங்கமாகவும் உபயோகப்படுத்தும் பொது - அடா அடா என்ன அழகு - ரொம்ப விஷமக்காரன் - ரொம்ப குறும்பு என்றெல்லாம் அவனை கொஞ்சி உசுப்பேத்திவிட்டிருந்தேன். அது போதாதென்று நானே பல முறை போனை கீழே போட்டும், சில முறை சும்மா ஒரு இதுக்காக - தூக்கி போட்டு பிடித்து விளையாடியும் இருக்கிறேன் - மூத்தவன் அவன் பங்கிற்கு அந்த பாவப்பட்ட போனை பலாத்காரம் செய்திருக்கிறான். உடைந்த கண்ணாடிக்கு சைனாவிலிருந்து ஐந்து டாலருக்கு மாற்று வாங்கி பொருத்தியிருந்தேன். ஸ்காட் டேப் வைத்து ஒட்டு போட்டிருந்தேன்.
உங்களுக்க ஒரு சின்ன ரகசியம் சொல்கிறேன். இது எல்லாம் ஒரு மிகப்பெரிய சதி திட்டத்தில் அடங்கியவை :-) இது அவளுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
"ஆமாம்! இவ்ளோ செலவு பண்றோம். வேற ஒரு போன் வாங்கிக்கறதுக்கென்ன?" - அரோகரா ...அடிசக்கை - அதான் அதான் அதேதான் - தேனாய் காதில் பாய்ந்தது. "சரி.. சரி வாங்கிடலாம். புதுசா ஐ-போன் மாதிரி ஒண்ணு வந்திருக்காமே...". அப்பாடா! பெருமூச்சு!
எல்லாம் உனக்காக - என் இனிய இயந்திரா!
--
இதைப்பற்றி இன்றே எழுதியாக வேண்டும். ஆபிஸ் ஒரு அறை மணி லேட் என்று முடிவானது.
இன்று காலை முதல் வேலையாக காலைக்கடன்களை முடித்து விட்டு - மடமடவென்று டேனியல் வெப்ச்டார் ஹைவேயில் இருந்த வெரைசான் கடையை சென்றடைந்தேன்.. ஒரு எழுஎட்டு பேர் இருந்திருப்பார்கள். நான் இன்று சில இந்த போனை பற்றி சில மறைந்த உண்மகளை கண்டறிந்தேன். இதை பற்றி இந்த வாரக்கடைசியில் எழுதுகிறேன்.
--
கடையில் நான் இழந்தது - முன்னூற்றிச்சொச்சம்!
$199.00 - போன்
$26.99 - சார்ஜர்
$26.99 - கார் மௌன்ட்
$24.99 - மல்டிமீடியா டாக்கிங் ச்டேசன்
$14.99 - ஸ்கின்
$11.99 - ஸ்க்ரீன் ப்ரொடெக்டர்.
---------
$305.64 - "யம்மாடியோவ்!! "
---------
மனைவியிடம் அதனை சரிப்படுத்தி விளக்கிய விதம்.
$150 - ஜி பி எஸ்
$100 - போன்
$75 - 5MP கேமரா
$100 - 16ஜிபி MP3 ப்ளேயர்
$150 - விடியோ கேம்
$575 - மொத்தம். +$100 - மெயில் தள்ளுபடி - "ஓ அப்படியா? பரவாயில்லையே!" - hee! hee! hee!
ஒரு சின்ன விஷயம் - இன்னும் டப்பாக்களை நான் திறக்கவில்லை. நாளை வரை என் கம்ப்யூட்டர் அறை கிடங்கில் கிடக்கும். மீண்டும் பார்போம்.
தொடரும் .....
Comments