விசைப்பலகை, ஆசைப்பலகை, இசைப்பலகை

என் பழைய பதிவுகளை படித்துவிட்டு எப்படி 'டைப்' செய்தீர்கள் என்று பல கேள்விகள் வந்தது. தமிழ் செயலிகளை பற்றி பல்வேறு இணைய தளங்களில் குறிப்புகள் அளிக்கப்பட்டிருக்கின்றன. இருந்தாலும் நல்ல ஒரு செயலி இலவச உபயோகத்திற்கு எட்டுவது கடினமாக இருக்கிறது..

நான் உபயோகப்படுத்துவது கீழே இருக்கும் இவை இரண்டு மட்டும்.

'கே ஸ்டார் ஸாப்ட்' இடமிருக்கும் 'குறள்' - நான் பார்த்தவைகளிலேயே மிகச் சிறந்தது. இது இப்போதெல்லாம் இலவசம் இல்லை. விலை $35.
இதை வைத்து கொண்டு எந்த 'சாஃப்ட்வேரிலும்' தமிழ் எழுத்தகளை உள்ளிட முடிகிறது. 'ஃபொனெடிக் கீபோர்ட்' என்பதால் ஆங்கில எழுத்தளை கொண்டு 'டைப்' செய்ய முடிகிறது.

அடுத்தது 'திருவின்' என்ற ஒரு செயலி. முதலில் அந்த செயலியினுள் 'டைப்' செய்து விட்டு பிறகு 'வெட்டி ஒட்ட' வேண்டியுள்ளது. இது முற்றிலும் இலவசம். முடிந்தால் $50 அனுப்ப கோருகிறார் அதை இயற்றியவர். அதை உபயோகப்படுத்தி தான் இந்த பதிவை எழுதுகிறேன்.

தவிற எதாவது உங்களுக்கு தெரிந்தால் எனக்கு எனக்கும் தெரியப்படுத்தவும்.

Comments

இப்போதெல்லாம் கூகிள் labs indic transiletration தளத்தை பயன்படுத்தி எழுதுகிறேன்.
இங்கே - http://www.google.com/transliterate/indic/Tamil

Popular posts from this blog

வழி மறைத்திருக்குதே

கண்ணனால் பாட்டு பிறந்தது

ஸ்வேதபூதி த்ரிபுண்ட்ரேண ....